முன்னோர் மொழி பொருள்கள்:

சைவ சமயக் கலைக்களஞ்சியத்தில் 19,20 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்து ,சைவ சமய வளர்சிக்கு அரும்பணியாற்றி மறைந்த பேரறிஞர்கள் பலரின் படைப்புகளிலிருந்து சைவப் பெருமிதம் குறித்த சிற்சில பகுதிகள்,அன்னாரைத் திசைநோக்கி வணங்கிப் பணிவுடன் எடுத்து இணைத்துக்கொள்ளப்பட்டன,மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை,உ.வே.சாமிநாதையர்,சோமசுந்தரநாயக்கர்,ஞானியாரடிகள்,மறைமலையடிகள் ,திரு.வி.கலியாண சுந்தரனார்,மா.பாலசுப்பிரமணியமுதலியார்,கி.வா.ஜகந்தாதன்.ந.ரா.முருகவேள்,க.வெள்ளைவாரணனார்,க.வச்சிரவேல் முதலியார்,கயப்பாக்கம் சோமசுந்தரஞ்செட்டியார்,ஜெ.எம்.நல்ல சாமிப்பிள்ளை,தவத்திரு.ஆறுமுக நாவலர்,தவத்திரு.சுந்தரசுவாமிகள்,குன்றக்குடி அடிகளார்,மு.அருணாசலம்,சி.சு.மணி,கிரிதாரி பிரசாத் .இரத்தினா நவரத்தினம்,பவானி மு.கண்ணப்பர்,ம.பொ.சிவஞானம் போன்ற அறிஞர்களின் எழுத்தோவியங்கள் இக்களஞ்சியத்தை அலங்கரிப்பதோடு அன்னாரின் நல்லாசிகளையும் வழங்குகின்றன. இன்று நம்மோடு வாழ்ந்து வரும் சைவ அறிஞர்களின் பங்களிப்பை பட்டியல் இடுவது மிகக் கடினம். ஏறத்தாழ 220 அறிஞர்களின் அளப்பரிய சிந்தனைகளும், எழுத்தோவியங்கழும் களஞ்சியத்தைப் பெருமைப்படுத்துகின்றன. அன்னாரின் பெயர் விவரங்கழும்,சிறு வாழ்க்கைக் குறிப்புகளும் ஆங்காங்கே பதிவு செய்யப் பெற்றுள்ளன.

வாழ்த்துரை வழங்கிய வள்ளல்கள் :

ஒவ்வொரு தொகுதிக்கும் துறை சார்ந்த,நன்கு அறியப்பபட்ட சைவப் பற்றாளர். ஒவ்வொருவரிடம் வாழ்த்துரைகள் பெறப்பட்டன. மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசர் ஐஸ்டிஸ் ஏ.ஆர்.லட்சுமணன்,அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி,மேனாள்தமிழகத் தொல்பொருளாய்வுத்துறை இயக்குநர் டாக்டர் இரா.நாகசாமி,மதுரை மீனாச்சி சுந்தரேஸ்வர் திருக்கோவில் தக்கார் கருமுத்து தி. கண்ணன்,பேராசிரியை டாக்டர் கோமதி.சூரியமூர்த்தி,டாக்டர் வெ.கனகசுந்தரம் ஆந்திர மாநில உயர் நீதி மன்ற நீதியரசர் இராஜ.இளங்கோ ஆகியோர் கலைக்களஞ்சியத்தின் தயாரிப்பு முறைகளை உள்வாங்கி ஈரமொழிகளால் வாழ்த்துரை வழங்கி மகிழ்வித்துள்ளனர் .

ஆசியரை வழங்கிய ஆதின கர்த்தர்கள்:

கலைக்களஞ்சியத் தொகுதிகள் படி எடுக்கப்பெற்று, சைவ சமய அருளாளர்களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கும் அனுப்பி வைக்கப் பெற்றன. திருக்கயிலாய பரம்பரை சைவ சித்தாந்த ஆதினங்களுள் ஒன்றாகிய தருமபுர ஆதின குருமகா சந்நிதானத்தின் வாழத்துக்கள் நேரில் பெறப்பட்டன. மேலும், திருவாவடுதுறை ஆதினம்,திருப்பனந்தாள் காசித் திருமடம்,குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம்,திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதினம்,கோவை பேரூராதினம்,கோவை கௌமார மடாலயம்,தவதிரு இரத்தினகிரி பாலமுருகனடிமை,ஸ்ரீபுரம் பொற்கோயில் நாராயணி அம்மா ஆகியோர் ஒவ்வொரு தொகுதிக்கும் அருளாசியுரை வழங்கி எம் முயற்சியைப் பெரிதும் பாராட்டி மகிழ்ந்துள்ளனர். .


அணிந்துரைகள் வழங்கிய சான்றோர்கள்:

கலைக்களஞ்சியத் தொகுதிகளை திறனாய்வு செய்து, குறை நிறைகளை எடுத்துக் காட்டச் சைவத் அறிஞர்களிடம் அணிந்துரை வேண்டினோம். பேராசிரியர் முனைவர் சோ.ந.கந்தசாமி,புலவர்.கோ.சாரங்கபாணி,வடலூர் சன்மார்க்கதேசிகன் தவத்திரு.ஊரனடிகளார்,டாக்டர் மு.சிவச்சந்திரன்,டாக்டர்.சி.சிவசங்கரன்,மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் டாக்டர்.எஸ்.ஜகத்ரட்சகன்,சொல்வேந்தர் சுகிசிவம்,இலங்கை அறிஞர் கம்பவாரித் இ.ஜெயராஜ் செந்தமிழ்புரவலர் இரா.ராஜசேகரன் ஆகியோர் கலைக்களஞ்சியத்தின் திட்ப நுட்பங்களை அடையாளப்படுத்தி நேர்த்திமிகு அணிந்துரைகள் வழங்கி மகிழ்வித்தனர்.


ஆங்கில முகவுரை தந்து அணி செய்தோர்:

புலம் பெயர்ந்தும்,தமிழ் மண்ணிலும் வாழ்ந்து வரும் ஆங்கில நூற்பயிற்சியில் சிறந்தும்,தமிழில் ஓரளவு பயிற்சியும் உடைய சைவத் தமிழ் மக்களுக்கு கலைக் களஞ்சிய முயற்சியை எடுத்து இயம்பும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் அறிஞர் ஒருவர் வழங்கிய ஆங்கில முகவுரைகள் இணைக்கப் பெற்றன.ஆங்கில முகவுரைகளை மேனாள்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துணை வேந்தர் கு.ஆளுடையபிள்ளை.டாக்டர் சி.இ சூரியமூர்த்தி,சைவ சித்தாந்த அறிஞர்.தி.ந. இராமச்சந்திரன், இராமநாதன் பழனியப்பன்,சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வெ.இராமசுபபி்ரமணியன்,டாக்டர் சுதாசேஷையன் மேனாள் காரைக்குடி பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர்.திருமதி இராதா தியாகராஜன்,சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்ற மேனாள் தலைவர் எஸ்.தியகராஜன் ஆகியோர் வழங்கிப் பெருமைப் படுத்தி உள்ளனர்.


Copyright © Saivam 2013 .All rights reserved