தலைமைப் பதிப்பாசிரியர்

தமிழ்நாட்டில் நன்கு அறிஞர் உலகத்தால் அறியப்பட்ட மூத்த சைவத் தமிழ் அறிஞர் டாக்டர். இரா.செல்வக்கணபதி. 18 பல்கலைக்கழகங்களில் அங்கம் வகித்தவர். தமிழ்ப் பேராசிரயர்,துறைத்தலைவர்,கல்லூரி முதல்வர் என 31 ஆண்டுகள் கற்பித்த அனுபவம் வாய்க்கப்பெற்றவர். பல்வேறு நிறுவனங்களால் 15க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றவர்.14 அரிய நூல்களின் ஆசிரியர்,200 மணி நேரத்திற்கு மேல் ஒலிக்கும் சைவ சமயம் குறித்த இவரது பேருரை CDக்கள் 80 நாடுகளில் ஒலித்து வருகின்றன.சைவ - ஆதினங்களின் தொடர்பும்,சைவ அறிஞர் உலகத்தின் நன்மதிப்பும் அன்னாருக்கு இம்மாபெரும் கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்குத் துணையாக நின்றன. 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சைவ - சமயத்தோய்வும்,பயிற்சியும்,ஆய்வும் கலைக்களஞ்சிய உருவாக்கத்தை அவருக்கு எளிதாக்கி நின்றன.

Copyright © Saivam 2013 .All rights reserved