கலைக்களஞ்சியத் தொகுப்பு வரிசை

சைவ-சமயக் கலைக்களஞ்சியம், சைவ - சமயத்தின் காலப்பழமை,அதன் விரிந்த மாபெரும் பரப்பு,திருகோயில்களின் எண்ணிக்கை, கணக்கிலடங்காத சைவ நூல்கள் தந்த பிரமிப்பு, அதனைப் படைத்த அருளாளர்களின் பெருமிதம்,மற்றும் வேறு பல சிறப்பியல்புகள் காரணமாக ஆசிரியர் குழுவால் 10 தொகுதிகளாகப் பகுப்பாய்வு செய்து பதிவு செய்யப் பெற்றது.

1 சைவ சமயம் தமிழகம் ( புதுச்சேரி மாநிலம் உட்பட)
2. சைவ சமயம் - உலகம் (தமிழகத்து அப்பால்)
3. சைவத் திருமுறைகள்
4. திருமுறைத் தலங்கள்
5. பிற்காலத் தலங்கள்
6. சைவ சமய அருளாளர்கள்
7. சைவ சமய அருள் நூல்கள்
8. சைவ சித்தாந்தம்
9. சைவ சமய அமைப்புகள்
10.தோரணவாயில் என்பன சைவ - சமயக் கலைக்களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகள்.

வாசகர்களின் தேடலுக்காக மேற்குறித்த 10 பகுப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும்,கலைக்களஞ்சியம் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய ஒரே தொகுப்பாகவே அமைக்கப் பெற்றுள்ளது . ஒவ்வொரு தொகுதியிலும் செய்திகள் அகர வரிசை முறையில்,கலைக் களஞ்சிய இலக்கண நெறி நின்று வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
Copyright © Saivam 2013 .All rights reserved