கலைக்களஞ்சிய உள்கட்டமைப்பு

சைவ - சமயக் கலைக்களஞ்சியம் A4 அளவில் (11" x 8.5"),மிகத் தரமான தாளில்,பல வண்ணத்தில், 3000க்கும் மேற்பட்ட வண்ணப் படங்களை உள்ளடக்கியதாய்,மேற்கு நாடுகளின் குறிக்கத்தக்க சில ஆங்கில நூல்களுக்கு இணையான கட்டமைப்பில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியும்,656 பக்கங்கள் முதலாக 896 பக்கங்கள் வரை தேவைக்கு எற்ப நீட்டி அமைக்கப் பெற்றுள்ளது. 10 தொகுதிகளும், முன்னுரைப் பகுதிகளுடன் 7200 பக்கங்கள் கொண்டன. 10 தொகுதிகளில்,1500க்கு மேற்பட்ட செவ்வகக் கட்டங்கள் அமைக்கப்பெற்றது,சைவ - சமயம் குறித்த அரிய செய்திகள் அதனுள்ளே பதிவு செய்யப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தொகுதிலும்,
1. ஆசியுரை
2. வாழ்த்துரை
3. அணிந்துரை
4. ஆங்கில முகவுரை
5. ஆசிரியர் முன்னுரை
6. ஆசிரியர் குழுவினர் விபரம்
7. பொருளடக்கம்
8. நூற்பகுதி
9. பின்னிணைப்புகள்
10.பொருளடைவு எனச் செய்திகள் நிரலே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன
'நன்றி'என்ற தலைப்பில்,தொடர்புடைய அறிஞர்கள்,நூல்கள்,பதிப்பகத்தார்,தகவல் தந்து உதவியவர்கள் மற்றும் பிற செய்திகள் அகர வரிசையில் குறிக்கப் பெற்றுள்ளன.

Copyright © Saivam 2013 .All rights reserved