சைவ சமய முதல் வரலாற்று ஆவணம்
 |
தமிழ் மொழியில், உலகளாவிய சைவ - சமயம் குறித்த மாபெரும் முதல் பதிவு சைவ - சமயக் கலைக்களஞ்சியம் . வேத காலத்துக்கு முற்பட்ட காலம் தொடங்கி,இன்று வரையில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுக்கால சைவ - சமய வரலாற்று ஆவணமாக இக்களஞ்சியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மட்டுமல்லாது,இந்திய மாநிலங்கள்,ஆசிய நாடுகள்,ஏனைய கடல் கடந்த நாடுகளில் தோற்றம் கொண்டு வளர்ந்து சிறந்த சைவ சமயத்தை இக்களஞ்சியம் துல்லியமாக ஆராய்ந்துள்ளது.22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும்,50 ஆயிரம் துணைப் பதிவுகளையும் உள்ளடக்கிய அகன்ற பரப்பைக் கொண்டது. கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கென்றே நிறுவப் பெற்ற "தெய்வச் சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை" இம் முயற்சியை 2006 இல் தொடங்கி 7 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது. உலகளாவிய பல்துறைச் சைவப் பேரறிஞர்கள் 50 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும்,220 மூத்த சைவத்தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவும் கலைக்களஞ்சிய வடிவமைப்புக்குத் தூண்களாக அமைந்தன. சைவ - சமயக் கலைக் களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் செந்தமிழ் வாரிதி,சிவஞானக்கலாநிதி,கலைமாமணி,பேராசிரியர் டாக்டர். இரா. செல்வக்கணபதி ஆவார்கள்.
|
 |
|
|